Friday, September 9

ஒன்றினுள் ஒன்றாய்

இவ்வளவு பெரிய பெரிய பெரிய பிரபஞ்சத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரங்களும், சூரியன்களும், கோள்களும் ஒன்றினுள் ஒன்றாய் அமைந்து வலம் வருகிறது. பூமியில் மட்டுமே பல கோடி உயிரினங்கள். அதில் மனிதனுக்கு மட்டும் தனியொரு அறிவு.

மனிதன் முதன் முதலில் பேச தொடங்கிய மொழி தமிழ். தமிழர்கள் இன்று வாழும் முக்கிய இடமான தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் அதிகம். சித்தர்கள் அருள் பெற இறைவனை பற்றி அறியலாம்.

Thursday, December 17

Believing God

Today market went the way i predicted from morning..I had no money to participate and checking market was only my work...My friend told me give money around 3 pm..i received call around 4.13 from him and i was sleeping that time, got the message that he transferred money..in anticipation of doing work rush into the platform and all i got was error message of unable to transact...then i checked my bank balance, money yet to be credited to my account...after 5.15 im getting credited...now again went to platform to transfer money...but got no message of otp pin to my mobile...after trying many times i find time is not up for me...i went to take bath then my prayer..i know my god likes me more than i like him...i got a message of markets going to down..

Now, came again to platform to transfer money...on first attempt, the same problem of not getting otp pin..second time, i got it and finally transferred money

So finally, now i can do any trade now...But market already made roller coaster move i predicted...and i cant resist myself sit idle..made a trade with sell as i planned..yes after seeing two perfect closing candles and greens are coming after touching exactly first support line...i know patience is important but in practical it is easy to follow..first i made 26 points stop less and rectified it to 32 points..there comes for me, market made a strong up :D and taking new highs :D and touching 30 points..i slightly think about my god and asked him, i did this after asking you...(and i getting calm with myself after thought that my fate playing more than god in sometimes) if it touched 2 points more i would lost 64% of my capital which i borrowed..and i was pretty confident about my fate and concluded that its over.

Went out to take dinner..when i returned i found that points returned back and now above 6 points up...i know i have to finish it now and reduce my loss..but i didnt..God helped me to break the first support line(yes, the two perfect closing candles) and prices went down and i waited...God made me to wait and gave the patience of waiting..exactly after 3 hours 1 sec i closed it with profit of 32 points (64% profit).

While i went out to take my dinner, i thought to write in my notes as Pray to God but God wont help you always for your fate.

Now im not going to write that it in my notes..This is what im going to write, Pray to god to give you patience to cross your fate and pray to god to keep believing him.

Thursday, October 8

தமிழ்

     தமிழ் மொழி அறிந்ததால் ஆனந்தம் கொள்கிறேன். தமிழின் சிறப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் அமைதி கொள்கிறேன். தமிழ் மொழி அமுதம் போன்றது என்று கூறுவது தன் தந்தையை பார்த்து, நீங்கள் என் தந்தையை போல் இருக்கின்றீர் என்று கூறுவது போல் ஆகும். தமிழ் அமுதம் உணர்ந்து பருக தெய்வம் துணை செய்ய வேண்டும். பின்பு ஏன் இரு சொற்கள் இருக்க வேண்டும்? வேணுமென்றால் இப்படி வைத்துக் கொள்ளலாம் அமுதை காட்டிலும் இனிமை உடையதும் வாழ்நாளை நீட்டிக்க வைக்க உதவுவதும் தமிழ் ஆகும். தமிழ் தமிழே ஆகும்.

Sunday, October 4

கஞ்சமலைச் சித்தர் பாடல்

பரிபூர ணானந்த போதம் - சிவ
பரப்பிர்ம மான சதாசிவ பாதம்.

Thursday, September 24

பண்ணிய தவம் கை விடாது தொடரும்

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும் 
 தும்பிகள் இடைஇடை நுழையும் 
   தும்பைமா லிகையும் வம்புவார் சடையும் 
 துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும் 
நடநபங் கயமும் கிரணகங் கணமும் 
 நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும் 
   நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் 
 நமனையும் காணவல் லவரோ? 
கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற் 
 கோபுரம் *பாரிடம் தொடுத்துக் 
   கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக் 
 கொண்டல்வந்(து) உலவியே நிலவும் 
கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும் 
 கன்னிமா மாடமும் சூழ்ந்து 
   கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்!
 காலனைக் காய்ந்ததற் பரனே!

*பாரிடம் = பூதகணம்.  ++கடவை = திருக்கடவூர்.

இந்த பாடல் அபிராமி பட்டர் அருளிய திருக்கடவூர் காலசம்கார மூர்த்தி பதிகத்தின் முதல் பாடல். முழுப்பொருளும்  அறியும் அறிவு இல்லையெனினும் சிவன் அவன் நம்மை அருளுவதை உணர முடியும். பண்ணிய தவம் கை விடாது தொடரும்.

Sunday, September 20

தேடுதல் முடித்தல்

மனித வாழ்வு கிடைக்க எவ்வளவு  தவம் செய்திருப்போம். கிடைத்ததும் இறைவனனின் அடியை பிடித்து அவனை அடைய எவ்வளவு தவம் செய்திருப்போம். நம் வாழ்வை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து நம் தேடுதல் அனைத்தும் அவனை அடைவதே என்னும் நிலை வரும் வரை உலகில் பிறப்பை பெற்றுக்கொண்டே இருக்கிறோம். இறைவனை அடைவதற்கு நமக்கு உள்ள தூரம் ஒரு இம்மி அளவு என்று நினைக்கும் போது அவன் கருணையை நினைத்து கண்ணீர் விட வேண்டும். இம்மி அளவு தூரம் கடக்க பலப் பல பிறப்புகள் ? காரணங்கள் நம் தேடுதல் இறையை அடைவதை பற்றி இல்லையே. துருவன் ஏழு நாட்களிலே இறைவனை அடைந்த்தார் என்று புராணம்  கேட்கும் போது மனதிற்குள் ஒரு நம்பிக்கை நாமும் என்றாவது ஒரு நாள் நம் தேடலை முடித்து நம்  இறைவனை அடைவோம்.

Thursday, January 1

இயற்கை கண்ணீர் வடிக்கும். எப்போது?!

கோயில் யானைகள் முகாமில் பவானி ஆற்றில் குளியல் நடத்திய ஸ்ரீபெரும்புதூர் கோயில் யானை கோதை, ஆனந்தக் குளியலிலிருந்து விடுபட மறுத்து பாறையின் மீது அமர்ந்துகொண்டு அடம்பிடித்த காட்சியை பார்வையாளர்கள் கண்டு அசந்தனர்.

 கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாட்கள் தமிழக அரசின் கோயில் யானைகள் முகாம் நடந்து வருகிறது. இந்த யானைகள், அருகில் உள்ள பவானி ஆற்றில் பாகன்களால் குளிக்க வைக்கப்படுகின்றன.

அப்போது யானைகள் பெரும்பாலும் பவானியின் ஆனந்தக் குளியலை விட்டு வரமறுத்து அடம்பிடித்து பாகன்களுக்கு கட்டுப்படாத காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

 முகாம் தொடங்கிய நாளிலேயே வேதநாயகி என்ற யானை வரமறுக்க, அதன் பாகன் மரத்தின் மறைவில் ஒளிந்து விளையாட்டுக்காட்ட, வேதநாயகி வந்து மரத்தின் மறைவில் பாகன் ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டு திரும்ப ஓடிப்போய் ஆற்றுக்குள் இறங்கி போக்குகாட்டியது. எனவே, அந்தப் பாகன் நீ இப்படி செய்தால் சரிப்பட்டு வரமாட்டாய் என தண்ணீருக்குள் போய் மூழ்கி மறைய, பாகன் ஆற்றுவெள்ளத்தில் மூழ்கி விட்டதுபோல் கருதி தண்ணீருக்குள் உருண்டு புரண்டு தப்படித்து தண்ணீரில் மூழ்கிய பாகனை வெளியே வரவைத்தது. இந்த அற்புதக் காட்சியை இங்கு வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


 


இவர்களில், யானையோ பாகனோ யார் பிறிந்தாலும் கண்ணீர் வடிக்க போவது இயற்கை.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது. தமிழராய் நாம் இருந்து கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ஏன் கூற வேண்டும் என்று. பின்பு சிந்திதுப் பார்த்த போது உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இந்நாளில் நம்மால் மகிழ்ச்சியை வார்த்தைகளில் அனைவருக்கும் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறதே.

Monday, January 28

en payanathil

polama venama ? seri pogalam...illa venam...ipothaiku ingaye pakalam...illa summa irukurathuku angaye pogalam...anga vena ingaye irukalam..ipdiye thirumba thirumba pala vitha ennangal...iruthiyaga chennai pogalam endru mudiveduthu indru payanathai thuvakavirukiren..oru job la join pannitu konjam earn pananum...kanna mooditu job, room, exams preparation ipdiye irukanumnu iraivanai nadungikonde vendi kondu kilambukiren...nan nenaipathu enaku saathiyam aaga arul puriya vendukiren..siva siva..siva siva.